ஓடும் ரெயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனத்தில் ஈடுபட்டு கைதான வாலிபர்களுக்கு கோர்ட்டு நூதன தண்டனை

ஓடும் ரெயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனத்தில் ஈடுபட்டு கைதான வாலிபர்களுக்கு கோர்ட்டு நூதன தண்டனை வழங்கியுள்ளது.
ஓடும் ரெயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனத்தில் ஈடுபட்டு கைதான வாலிபர்களுக்கு கோர்ட்டு நூதன தண்டனை
Published on

மும்பை,

அண்மைகாலமாக சமூக வலைத்தளங்களில் கிகி சேலஞ்ச் வீடியோக்கள் அதிகம் பரவி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடுவதே இந்த கிகி சேலஞ்ச் ஆகும். இது ஆபத்து நிறைந்தது என்பதால் கிகி சேலஞ்ச் விபரீத செயலில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இந்தநிலையில் ஓடும் ரெயிலில் கிகி சேலஞ்ச் நடனத்தில் ஈடுபட்ட மராட்டிய மாநிலம் விராரை சேர்ந்த நிசாந்த் (வயது 20), துருவ் (23), சியாம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ரெயில்வே கோர்ட்டு அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியது.

அதன்படி அவர்கள் 3 நாட்கள் வசாய் ரெயில் நிலையத்தை சுத்தம் செய்யவேண்டும். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், ஓடும் ரெயிலில் சாகசங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாலிபர்கள் ரெயில் நிலையத்தை சுத்தம் செய்யும் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் வீடியோக்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com