உதட்டில் முத்தமிடுவது குற்றம் அல்ல! போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஜாமீன்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

உதடுகளில் முத்தமிடுவதும், தொட்டு கொஞ்சி மகிழ்வதும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் அல்ல என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
உதட்டில் முத்தமிடுவது குற்றம் அல்ல! போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஜாமீன்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மும்பை,

மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அந்த சிறுவன் செல்வது வழக்கம். அவன் அங்கு சென்று, தான் மொபைல் போனில் விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்காக ரீசார்ஜ் செய்து வந்துள்ளான். இது வாடிக்கையாகிவிட்டது.

சிறுவனின் தந்தை அவர்களின் அலமாரியில் இருந்து கொஞ்சம் பணம் காணவில்லை என்பதை கண்டறிந்து தனது மகனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவன் நடந்ததை கூறியுள்ளான். குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் பணத்தை கொடுத்ததாக சிறுவன் அவரிடம் கூறினான். மேலும், ஒரு நாள், சிறுவன் ரீசார்ஜ் எடுக்கச் சென்றபோது, அந்த கடைக்காரர் அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு, அவனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டார் எனக் கூறியுள்ளான்.

இதனையடுத்து சிறுவனின் தந்தை காவல்துறையை அணுகினார். அந்த கடைக்காரர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின், இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு நீதிபதி அந்த நபருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

மேலும், சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியது நிரூபிக்கப்படவில்லை. உதடுகளில் முத்தமிடுவதும், தொட்டு கொஞ்சி மகிழ்வதும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் அல்ல, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்கள் அல்ல என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com