

புதுடெல்லி
கெரோனா தெற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து ,சி-வோட்டருடன் இணைந்து ஏபிபி நியூஸ் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவின் தடுப்பூசி நடவடிக்கை, நடந்து வரும் விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் பல் பிரச்சினைகள் போன்ற பல்வேறு காரணிகளை இந்த கணிப்பு மையமாகக் கொண்டுள்ளது.
கடந்த 2020 மார்ச் தொடங்கி தற்போது வரை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி, கிட்டத்திட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பில் வெளியிட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:-
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 79.5 சதவீத மக்கள், கொரோனா வைரஸ் தொற்று நோயை மோடி அரசு கையாண்ட விதத்தில் திருப்தி அடைந்துள்ளதாகவும், வெறும் 12.5 பேர் அரசாங்கத்தின் முயற்சிகளில் மகிழ்ச்சியடையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கின் போது மத்திய அரசின் முயற்சிகளில் எத்தனை பேர் திருப்தி அடைந்துள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளித்த 78 சதவீதத்தினர் திருப்தி என கூறி உள்ளனர்.
ஊரடங்கின் போது அரசாங்கத்தின் பணிகளுக்கு கணிசமான ஒப்புதல் இருந்தபோதிலும், 53 சதவீதம் பேர் கொரோனா வைரஸின் நிலைமை மிகைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர், அதே நேரத்தில் 34 சதவீதம் பேர் வேறுவிதமாக உணர்ந்தனர்.
தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு எவ்வாறு கையாள்கிறது என்று மக்களிடம் கேட்கப்பட்டபோது, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மத்திய அரசை பாராட்டினர், 32 சதவீதம் பேர் தடுப்பூசிகளைப் மத்திய அரசின் செயல்களை விரும்பவில்லை என கூறப்பட்டு உள்ளது.