கோலார் தங்கவயல் கன்னட அமைப்புகள் ஆதரவு

கர்நாடக முழுஅடைப்பு போராட்டத்துக்கு கோலார் தங்கவயலில் கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோலார் தங்கவயல் கன்னட அமைப்புகள் ஆதரவு
Published on

கோலார் தங்கவயல்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த 26-ந்தேதி பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் முழுஅடைப்புக்கு கன்னட அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த முழுஅடைப்புக்கு 100-க்கும் மற்பட்ட கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், கர்நாடக முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக நேற்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் கன்னட அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை கண்டித்தும், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடகம் முழுவதும் நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கன்னட அமைப்பினா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com