நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது மோதிய பறவைகள்; அவசர அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் 165 பேர் பயணித்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவுக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 165 பேர் பயணித்தனர்.
விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் மீது பறவைகள் மோதின. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கபட்டது. பின்னர், விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
அதேவேளை, பயணிகளை மாற்று விமானம் மூலம் கொல்கத்தாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






