கொல்கத்தாவில் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

2-ம் வகுப்பு மாணவியை பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பெற்றோர்கள் அந்த பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அந்த பள்ளியின் நடன ஆசிரியர் ஒருவர் 2 -வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். சிறுமியை ஆசிரியர் இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டி உள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று காலை வெளியில் தெரிய வந்து உள்ளது. இதை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பள்ளியின் ஆசிரியரை கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com