

கொல்கத்தா,
மக்களவையின் முன்னாள் சபாநாயகராக இருந்தவர் சோம்நாத் சாட்டர்ஜி (வயது 88). மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ள இவருக்கு கடந்த ஜூன் 27ந்தேதி இரவு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது. உடல் நிலை மோசமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சையை அடுத்து உடல்நிலை சீரடைந்தது.
இந்த நிலையில், கடந்த 10ந்தேதி அவருக்கு மீண்டும் உடல் நல குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவருக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 5 வருடங்கள் வரை சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜி பதவி வகித்துள்ளார்.