கொல்கத்தா: துர்கா பூஜையில் பழங்குடியினருடன் சேர்ந்து நடனமாடிய மம்தா பானர்ஜி...!

கொல்கத்தாவில் துர்கா பூஜையில் பழங்குடியினருடன் சேர்ந்து முதல்-மந்த்ரி மம்தா பானர்ஜி நடனமாடினார்.
கொல்கத்தா: துர்கா பூஜையில் பழங்குடியினருடன் சேர்ந்து நடனமாடிய மம்தா பானர்ஜி...!
Published on

கொல்கத்தா,

வடமாநிலங்களில் நவராத்திரி விழாவையொட்டி துர்கா பூஜை பிரபலமாக நடைபெறும். இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதுபோல துர்கா சிலைகளையும் கரைத்துவிடுவார்கள்.

இந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் பழங்குடியின மக்களுடன் மம்தா பானர்ஜி சேர்ந்து நடனமாடி அசத்தினார்.

தாளத்திற்கு ஏற்ப உடல் அசைவுகளால் கவனம் ஈர்த்த பழங்குடியின மக்களுடன் முதல்-மந்திரி மம்தாவும் கலந்து கொண்டு, நடனமாடியது பலரது கவனத்தை ஈர்த்தது. இதனை அங்கிருந்தவர்கள் ரசித்து பார்த்ததோடு, இந்த காட்சிகளை தங்கள் செல்போனில் படம்பிடித்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com