கொல்கத்தா: துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்

துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா: துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
Published on: 

கொல்கத்தா,

துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானோர் குடும்பங்களுக்கு அம்மாநில கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசல்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோர்பாகன் சர்பஜனின் துர்கா பூஜை பந்தலில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெரிசலில் சிக்கி 17 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் சோகம்

கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மற்றும் மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வால் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்தார். துர்கா பூஜை விழாவின்போது ஏற்பட்ட இந்தக் கூட்ட நெரிசல் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்

இந்நிலையில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கு வங்காள கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், “கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்தால் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது குறித்து நான் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளேன். இந்த துயர நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com