

செர்பியா,
செஸ் போட்டிகளில் "கிராண்ட் மாஸ்டர் " பட்டம் உயரிய ஒன்றாக கருதப்படுகிறது. இதை அடைய ஒரு வீரர் 2500 எலோ புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெறவேண்டும் . இந்தியாவின் மித்ரபா குஹா செர்பியாவில் நடைபெற்ற செஸ் தொடரில் 2500 புள்ளிகளை அடைந்ததன் மூலம் 72-வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.
72-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மித்ரபா குஹாவிற்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்தது. மேலும் முன்னாள் உலக சாம்பியனும், செஸ் ஜாம்பவானுமான விஸ்வநாதன் ஆனந்தும் குஹாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த மாதம் இந்தியாவின் 70- வது செஸ் கிராண்ட்மாஸ்டர் எனும் பெருமையை தெலுங்கானாவின் ராஜா ரித்விக்கும், 71- வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை சங்கல்ப் குப்தாவும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.