

கோழிக்கோடு,
கொரோனா ஊரடங்கால், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம், இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 191 பேர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்தது,
ஓடுதளம் அருகே வந்த போது, 35 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டாக உடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து கோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 123 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கோழிக்கோடு விமான விபத்தில் விமான பயணிகளின் நிலை குறித்து அறிய தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்பு எண்கள்:-
* விமான நிலைய கட்டுப்பாட்டு அறை - 0495 2376901
* மலப்புறம் ஆட்சியர் - 0483 2736320
* கோழிக்கோடு ஆட்சியர் - 0495 2376901