

ஹைதராபாத்,
தமிழகத்தின் தேவைக்காக, ஆண்டு தோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும். அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை என ஆந்திர அரசு தெரிவித்திருந்தது.
தற்போது கண்டலேறு அணையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் முதல் கட்டமாக வினாடிக்கு 1000 கண அடி வீதம் கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இன்று மாலை 2000 கன அடியாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், ஆந்திர அரசிடம் 8 டிஎம்சி தண்ணீர் தரக்கோரிய நிலையில் ஆந்திரா அரசு 5 டிஎம்சி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
இன்று திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நதிநீர், 5 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்டுக்கு வந்து சேரும்.