கேரளாவில் திடீரென தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்

திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் திடீரென தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து செம்பகமங்கலம் அருகே வந்தபோது இன்ஜின் பகுதியில் புகை வெளிவந்தது. இதை கவனித்த ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினார்.

சில நிமிடங்களில் பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com