

அதைத்தொடர்ந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் பஸ் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு அண்டை மாநிலமான மராட்டிய மாநிலத்திற்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூருவில் இருந்து மும்பை, புனேவுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மீரஜ், சோலாப்பூர், பந்தாப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நகரங்களுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பஸ்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படும். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் கூறியுள்ளது.