ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைப்பாவை பசவராஜ் பொம்மை: சித்தராமையா விமர்சனம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைப்பாவை போல பசவராஜ் பொம்மை செயல்படுவதாக சித்தராமையா விமர்சித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைப்பாவை பசவராஜ் பொம்மை: சித்தராமையா விமர்சனம்
Published on

மைசூரு,

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைப்பாவை போல செயல்படுவதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா விமர்சித்துள்ளார். இது குறித்து சித்தராமையா கூறுகையில், " நமக்கு ஒரு தகுதியற்ற முதல் மந்திரிதான் உள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைப்பாவையாக மாறிவிட்டார். இங்கு அரசங்கமோ, ஆட்சி நிர்வாகமோ எதுவும் இல்லை. சட்டத்துறை அமைச்சர் மதுசாமி கூறியது உண்மைதான்.." என்றார்.

முன்னதாக, கர்நாடகாவில் ஆட்சி நிர்வாகமே நடக்கவில்லை என்று ஏதோ மேனேஜ் செய்து கொண்டிருக்கிறோம் என்று மந்திரி மதுசாமி பேசிய ஆடியோ வைரலானது. இதற்கு விளக்கம் அளித்த மதுசாமி, தனது பேச்சு திரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து இருந்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com