கர்நாடகத்தில் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்

கர்நாடகத்தில் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்
Published on

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக நேற்று முன்தினம் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் குமாரசாமி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சேத்தன், மடாதிபதி நிஜகுனநந்தா சுவாமி உள்பட 15 பேரை தீர்த்துக்கட்டுவதாக ஒரு கொலை மிரட்டல் கடிதம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட 15 பிரபலங்களை கொலை செய்வதாக கையெழுத்து இல்லாத ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கர்நாடக அரசு தீவிரமாக கருதி, விசாரணை நடத்தி கடிதம் எழுதியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com