மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்றைய தினம் அதிகாலை திரிவேணி சங்கமத்தில் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் புனித நீராட குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் மற்றும் கவலைக்குரிய விஷயம். இந்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கக்கூடாது என்றார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் விஷால் திவாரி அலகாபாத் ஐகோர்ட்டை நாடுமாறு கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com