குஞ்சடிகா சமூகத்தை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க நடவடிக்கை; முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு பட்டியலில் குஞ்சடிகா சமூகத்தினரை சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
குஞ்சடிகா சமூகத்தை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க நடவடிக்கை; முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
Published on

சிவமொக்கா;

குஞ்சடிகா

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் நடந்த குஞ்சிடிகா சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த குஞ்சடிகா (ஓ.பி.சி) பிற்படுத்தபட்ட இடம் ஒதுக்கீடு உரிமைகள் மாநாட்டை முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

ஏழைகள் என்பது எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். எனது ஆட்சிக் காலத்தில் பிராமணர், ஒக்கலிகர், மராட்டியர்கள் ஆகியோருக்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தை தொடங்கி ரூ.100 கோடி நிதி வழங்கினேன். அதேபோல குஞ்சடிகா மேம்பாட்டிற்கு ரூ.11 கோடி நிதி வழங்கினேன். தற்போது மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

அதேபோல குஞ்சடிகா சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களை ஓ.பி.சி பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு சலுகைகள் கிடைக்க செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசிடம் குஞ்சடிகா சமூகத்தை ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதற்கான முயற்சியில் நேர்மையாக ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு நடவடிக்கை

இதை தொடர்ந்து பேசிய முன்னாள் மந்திரி டி.பி.ஜெயசந்திரா கூறியதாவது:- 1999-ம் ஆண்டில் குஞ்சடிகா சமூகத்தை ஓ.பி.சி.யில் சேர்க்க மத்திய அரசுக்கு, மாநில அரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அப்போது இருந்த மத்திய அரசு எதற்காக குஞ்சடிகா சமூகத்தை ஓ.பி.சியில் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய ஆய்வுபடி குஞ்சடிகாவை ஒ.பி.சியில் சேர்த்திருக்கவேண்டும். ஆனால் சேர்க்கவில்லை. இதற்கான முயற்சியை மீண்டும் மேற்கொண்டு ஓ.பி.சியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com