மத்திய இணை மந்திரி பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா

பாஜக மூத்த தலைவர் எல்.முருகன்.
மத்திய இணை மந்திரி பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா
Published on: 

டெல்லி,

மத்திய இணை மந்திரி பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எல்.முருகன். இவர் மத்திய மந்திரி சபையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

இவர் 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். இவர் 2020ம் ஆண்டு முதல் 2021வரை தமிழக பாஜக தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

எல்.முருகன் ராஜினாமா

இந்நிலையில், மத்திய இணை மந்திரி பதவியை எல்.முருகன் இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும், மத்திய இணை மந்திரியாக பணியாற்ற தனக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய இணை மந்திரி பதவியை ராஜினாமா செய்தபோதும் 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பாஜகவை வலுப்படுத்த முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற உள்ளதாக எல். முருகன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com