சிக்கமகளூருவில் 2-வது மனைவியை அடித்து கொன்ற தொழிலாளி கைது

சிக்கமகளூருவில் நடத்தையில் சந்தேகத்தால் 2-வது மனைவியை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூருவில் 2-வது மனைவியை அடித்து கொன்ற தொழிலாளி கைது
Published on

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் நடத்தையில் சந்தேகத்தால் 2-வது மனைவியை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் பாலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிறிஸ்டியன் காலனியில் வசித்து வருபவர் சபீர் (வயது 38).தாழிலாளி. இவரது மனைவி கடந்த 2021 -ம் ஆண்டு கொரோனா காரணமாக இறந்து விட்டார். இதனால் சமீர் கடந்த 2022-ம் ஆண்டு சிக்கமகளூரு மாவட்டத்தை சோந்த சமாபானு (34), என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து 2 பேரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனா. இந்த நிலையில் சமீருக்கு, சமாபானுவின் நடத்தையில் சந்தகம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமீர், அவரது மனைவி சமாபானுவும் கோவாவிற்கு சுற்றுலா சென்றனா.

சுற்றுலா தலம்

அங்கு சுற்றுலா தலங்களை அவர்கள் 2 பேரும் சுற்றி பார்த்தனர். பின்னர் சமீர், சமாபானு ஆகியோர் சிக்கமகளூவுக்கு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சமீர் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சமாபானுவை சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் சமாபானு ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தா. இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கமகளூரு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாபானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சமீரை தேடி வந்தனர்.

போலீசில் சரண்

இந்தநிலையில், சிக்கமகளூரு டவுன் போலீசில் சமீர் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 2-வது மனைவி சமாபானு மீது சமீருக்கு நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சமாபானு, சமீரை கொல செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர் சமீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com