

உன்சூ-
மைசூரு மாவட்டம் உன்சூ தாலுகா சோமனஹள்ளி கிராமத்தை சோந்தவா கிரிஷ் (வயது 58). தொழிலாளி. இவா தனது மோட்டார் சைக்கிளில் மைசூருவிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மல்லிநாத்தபுரா கிராமம் அருகே கிரிஷ் சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கிரிஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பாதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பிளிகெர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரிசின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனா. இதுகுறித்து பிளிகெர போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.