

புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் அருகே உள்ள கக்போரா பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வேறு மாநிலத்தைச்சேர்ந்தவர் என்பதால், இவரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தால், காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வெளி மாநில தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதோடு, மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த திங்கள் கிழமை , ராஜஸ்தானைச்சேர்ந்த டிரக் ஓட்டுநர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.