லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்

லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்
Published on

புதுடெல்லி

பாங்காங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் சீன மற்றும் இந்திய படைகளை விலக்கி கொள்வது இன்று முதல் தொடங்கி உள்ளதாக சீன ஊடகங்கள் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவுக்கும்- இந்தியாவுக்கும் ராணுவ தளபதி மட்டத்திலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையின் போது படைகளை விலக்கி கொள்வது குறித்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

இருப்பினும் படைகளை விலக்கி கொள்வது குறித்து இந்திய தர்ப்பில் இருந்து அதிகாரப்பூர்வ எதிர்வினை அல்லது உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com