சீனா செல்ல கேரள மந்திரிக்கு அனுமதி மறுத்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்

சீனா செல்ல கேரள மந்திரிக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சீனா செல்ல கேரள மந்திரிக்கு அனுமதி மறுத்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி

கேரள மாநில சுற்றுலாத்துறை மந்திரி சுரேந்திரன், சீனாவில் ஐ.நா. சார்பில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அனுமதி மறுத்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறுகையில், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மத்திய, மாநில மந்திரிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய நெறிமுறை ஏற்பாடுகள் குறித்து தூதரகம் மூலமாக ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு சீனாவில் ஆய்வு நடத்தியபோது, கேரள மந்திரிக்கு சீனாவில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.

வெளிநாடுகளில் நம் நாட்டு மக்கள் கண்ணிய குறைவாக நடத்தப்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை. எனவே கேரள மந்திரி சீனா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com