

புதுடெல்லி,
லடாக் மோதலை தொடர்ந்து இந்தியாவும், சீனாவும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் ஏற்படுத்த முயன்று வருகின்றன. இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, இருநாட்டு பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே கடைசியாக கடந்த 18-ந் தேதி நடந்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு பொறிமுறை கூட்டத்தில், இரு நாடுகளும் அடுத்தசுற்று ராணுவ பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் தூதரக மற்றும் ராணுவ ரீதியாக தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றன என்று கூறினார்.