

சிக்பள்ளாப்பூர்: சிக்பள்ளாப்பூர் அருகே குட்டையில் மூழ்கி பாட்டி-பேத்தி இறந்தனர்.
சாவு
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா பிஞ்சரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(வயது 45). இவரது பேத்தி லட்சுமி(6). இந்த நிலையில் நேற்று மஞ்சுளா தனது விவசாய நிலத்திற்கு லட்சுமியுடன் சென்று இருந்தார். அங்கு வேலை முடிந்ததும் மஞ்சுளாவும், லட்சுமியும் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது கை, கால்களை கழுவுவதற்காக விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டைக்கு மஞ்சுளா, லட்சுமி சென்று இருந்தனர்.
அவர்கள் குட்டையில் கை, கால்களை கழுவி கொண்டு இருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக 2 பேரும் குட்டையில் தவறி விழுந்தனர். இதில் அவர்கள் குட்டையில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் குட்டையில் மூழ்கி இறந்து விட்டனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் மஞ்சனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்து இருந்தனர்.
பிரேத பரிசோதனைக்கு...
அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் குட்டையில் மூழ்கி இறந்த பாட்டி-பேத்தியின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது 2 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர், கிராம மக்கள் கதறி அழுதனர். இந்த காட்சி நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
பின்னர் மஞ்சுளா, லட்சுமியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கவுரிபிதனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மஞ்சனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.