லகிம்பூர் வன்முறை; விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தது சுப்ரீம் கோர்ட்

லகிம்பூர் கேரி வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தர பிரதேச அரசு விசாரணை நடத்தி வருகிறது.
லகிம்பூர் வன்முறை; விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தது சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், கடந்த மாதம் 3-ந்தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மத்திய மந்திரி மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லகிம்பூர் கேரி வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தர பிரதேச அரசு விசாரணை நடத்தி வருகிறது. எனினும், இந்த வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அண்மையில் அதிருப்தி தெரிவித்தது. இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை தினசரி அடிப்படையில் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெய்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், விசாரணை குழுவில் இடம் பெறும், உத்தர பிரதேச மாநிலம் அல்லாத ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களையும் யோகி ஆதித்யநாத் அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது.

இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை முடித்து நிலை அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பிறகு, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com