லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன்

ரெயில்வேக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை தந்தது தொடர்பான மோசடி வழக்கில் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன்
Published on

புதுடெல்லி,

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரெயில்வே மந்திரியாக பொறுப்பு வகித்தார். அப்போது, ரெயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐயும் அமலாக்கத்துறையும் தீவிர விசாரணை நடத்தின. நிலத்தை லஞ்சமாக பெற்று 4,000-க்கும் மேற்பட்டோருக்கு ரெயில்வே துறையில் வேலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஊழல் தொடர்பான முக்கியமான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரெயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகார் முன்னாள் முதல்-மந்திரியும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியேருக்கு டெல்லி ரேஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com