லாலு பிரசாத் மகள் மீது மருமகள் குற்றச்சாட்டு

லாலு பிரசாத் மகள் மீது அவரது மருமகள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
லாலு பிரசாத் மகள் மீது மருமகள் குற்றச்சாட்டு
Published on

பாட்னா,

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத்தின் மருமகள் ஐஸ்வர்யாராய். இவர், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப்பின் மனைவி ஆவார். தேஜ் பிரதாப்புக்கும், ஐஸ்வர்யாராயுக்கும் இடையே திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாட்னாவில் நேற்று நிருபர்களை சந்தித்த ஐஸ்வர்யாராய் கூறியதாவது:-

எனக்கும், என் கணவருக்கும் இடையே விரிசல் ஏற்படுத்தியவர், எனது நாத்தனார் மிசா பாரதிதான் (லாலு பிரசாத்தின் மகள்). எனது கணவர் விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடிய பின்னரும் நான் இங்கு (மாமியார் வீட்டில்) வசிக்கிறேன். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தாலும் கூட, நாங்கள் விவாகரத்து செய்து விட்டதுபோலவே மிசா பாரதி நடத்துகிறார். 3 மாதங்களாக என்னை கொடுமைப்படுத்துகிறார். சாப்பாடு கூட தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com