'நாடு முழுவதும் நடக்கும் ரெயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?'லாலு பிரசாத் யாதவ் கேள்வி

மேற்குவங்காளத்தில் ரெயில்கள் மோதியதில் 9 பேர் பலியாகினர். 41 பேர் காயம் அடைந்தனர்.
'நாடு முழுவதும் நடக்கும் ரெயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?'லாலு பிரசாத் யாதவ் கேள்வி
Published on

பாட்னா,

மேற்குவங்காளத்தின் ஜல்பாய்குரியில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அந்த வகையில் பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் இந்த விபத்து தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நாடு முழுவதும் நிகழும் ரெயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com