லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்
Published on

ராஞ்சி,

ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2017ல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாகவும், அவரது உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com