சிக்கிமில் நிலச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


சிக்கிமில் நிலச்சரிவு:  3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
x

கனமழை காரணமாக சிக்கிமின் சாட்டென் மற்றும் லாச்சங் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கேங்டாக்:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகள் கனமழை காரணமாக வெள்ளம் போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றன. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரும் சிக்கிதவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று சுமார் இரவு 7 மணியளவில் சாட்டென் மற்றும் லாச்சங் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஹவில்தார் லக்விந்தர் சிங், லான்ஸ் நாயக் முனிஷ் தாக்கூர், போர்ட்டர் அபிஷேக் லகாடா ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 9 வீரர்கள் காணவில்லை எனவும் காணாமல் போன வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் ராணுவ முகாமில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காணாமல் போன 4 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் காணாமல் போன ஆறு பணியாளர்களைக் கண்டுபிடித்து மீட்பதற்காக மீட்புக் குழுக்கள் மிகவும் சவாலான நிலப்பரப்பில் 24 மணி நேரமும் இடைவிடாமல் உழைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story