ஒடிசாவில் லாரி கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி, 25 பேர் படுகாயம்

ஒடிசாவில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.
ஒடிசாவில் லாரி கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி, 25 பேர் படுகாயம்
Published on

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தின் கலிங்கி பகுதியில் இருந்து பிராமணிகாவ் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பொய்குடா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com