காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சோபூர் மாவட்டம் ஷங்கர்குண்ட் நகரில் ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் காஷ்மீர் போலீசார் குழுவாக இணைந்து சோதனை சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த நபர் பாதுகாப்பு படையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்.

எனினும் பாதுகாப்பு படையினர் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சோபூர் மாவட்டத்தை சேர்ந்த சாகிப் ஷகீல் தார் என்பதும், அவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com