கடந்த ஆண்டு மட்டும் ரெயில் கட்டண சலுகைக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவு - மத்திய மந்திரி தகவல்

கடந்த ஆண்டு மட்டும் ரெயில் கட்டண சலுகைக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் ரெயில் கட்டண சலுகைக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவு - மத்திய மந்திரி தகவல்
Published on

பிஜ்னோர்

ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ளார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெயில் பயணிகளுக்கு 55 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'ரெயில்வேக்கு ரூ.100 செலவாகிறது என்றால், வெறும் ரூ.45 மட்டுமே பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைக்காக மத்திய அரசு ரூ.62 ஆயிரம் கோடி செலவிட்டது' என்று தெரிவித்தார்.

புதிய ரெயில் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மின்சார ரெயில்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அவை என்ஜின் இல்லாமல 2-வது அல்லது 3-வது பெட்டியில் இருந்து இயக்கப்படும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.

தொலைத்தொடர்பு துறையையும் வகித்து வரும் அஸ்வினி வைஷ்ணவ், அக்டோபர் முதல் பி.எஸ்.என்.எல்.லில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாகவும், அடுத்த 500 நாட்களில் 5 பெரிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com