வாஜ்பாய் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, உத்தரகண்ட் மாநிலம் ஹிரித்துவாரில் கங்கையில் கரைக்கப்பட்டது. #AtalBihariVajpayee
வாஜ்பாய் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது
Published on

புதுடெல்லி,

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின்(வயது93) உடல் 21 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் ஆகஸ்ட் 17-ம் தேதி டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹரித்துவாரில் உள்ள பன்னாலால் பாலா கல்லூரியில் இருந்து, வாகனத்தில் ஊர்வலமாக வாஜ்பாயின் அஸ்தி கெண்டு செல்லப்பட்டது. முன்னதாக, அஸ்தியை, அவரது வளர்ப்பு மகள் நமிதாவும், பேத்தி நிகாரி உள்ளிட்ட குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் எடுத்து வந்தனர்.

இதனைத் தெடர்ந்து, அங்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யேகி ஆதித்யநாத் உள்ளிட்டேர், அஸ்தி கெண்டு செல்லப்பட்ட வாகனத்தில் பயணித்தனர். இது, அங்குள்ள பிரேம் ஆஸ்ரமத்துக்கு கெண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர், கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com