சட்ட கல்லூரி மாணவி விவகாரம்: சின்மயானந்திடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

சட்ட கல்லூரி மாணவி விவகாரம் தொடர்பாக, சின்மயானந்திடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
சட்ட கல்லூரி மாணவி விவகாரம்: சின்மயானந்திடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
Published on

ஷாஜகான்பூர்,

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த் (வயது 72) உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ஆசிரமமும், அறக்கட்டளை மூலம் பல கல்லூரிகளையும் நடத்திவருகிறார். இவரது சட்டக் கல்லூரியில் படித்துவந்த மாணவி ஒருவர் சின்மயானந்த் மீது கற்பழிப்பு, கடத்தல், கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இதுதொடர்பாக ஐ.ஜி. நவீன் அரோரா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திவருகிறது.

இந்த குழுவினர் நேற்று ஆசிரமம் சென்று சின்மயானந்திடம் விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் விசாரணை குழுவினர் மாணவியின் கல்லூரி விடுதிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். இந்த விசாரணை முழுவதும் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com