பொது சிவில் சட்டம் நடைமுறையில் சாத்தியம் இல்லை; சட்ட ஆணையம் ஒப்புக்கொண்டதாக முஸ்லீம் வாரியம் தகவல்

பொது சிவில் சட்டம் நடைமுறையில் சாத்தியம் இல்லை என சட்ட ஆணையம் ஒப்புக்கொண்டது என்று முஸ்லீம் வாரியம் தெரிவித்துள்ளது.
பொது சிவில் சட்டம் நடைமுறையில் சாத்தியம் இல்லை; சட்ட ஆணையம் ஒப்புக்கொண்டதாக முஸ்லீம் வாரியம் தகவல்
Published on

புதுடெல்லி,

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது என்று சட்ட ஆணையம் தெரிவித்ததாக முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

மத இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொதுவான கொள்கையாக, பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை மத்தியில் ஆளும் பாஜக பிரதான இலக்காக கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் சட்ட ஆணையம் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறது.

இந்த நிலையில், சட்ட ஆணையத்தின் தலைவர் பி.எஸ். சவுகானை, முஸ்லீம் வாரிய குழுவினர் நேற்று டெல்லியில் முஸ்லீம் வாரியகுழுவினர் சந்தித்து பேசினர். அப்போது, முஸ்லீம் தனிச்சட்டத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்க முடியாது என வலியுறுத்தியதாக வாரியத்தின் உறுப்பினர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இது குறித்து முஸ்லீம் வாரியத்தின் துணைத்தலைவர் சையது ஜலாலுதின் உம்ரி மேலும் கூறும் போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொது சிவில் சட்டம் வர வாய்ப்பில்லை என சவுகான் கூறியது நல்ல விஷயம். ஆனால், அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமல்ல, அதை எப்போதுமே கொண்டு வர வேண்டாம் என நாங்கள் சொன்னோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com