நடைமுறைக்கு ஏற்றதாக சட்டம் இருக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

நடைமுறைக்கு ஏற்றதாக சட்டம் இருக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.
சுப்ரிம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நேற்று மும்பை ஐகோர்ட்டில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- எந்தவொரு சட்டமோ அல்லது அரசியல் அமைப்போ தற்போதைய தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கப்பட வேண்டும். சட்டம், அரசியல் அமைப்பின் விளக்கம் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
நீதி துறையின் சுதந்திரம் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளப்படமாட்டாது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தகுதி அடிப்படையில் நடப்பதை கொலிஜியம் உறுதி செய்யும். நீதிபதிகள் தங்கள் பதவி பிரமாணம், உறுதி மொழிக்கு உண்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story