சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் - அதிர்ச்சி சம்பவம்

வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் - அதிர்ச்சி சம்பவம்
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் இளம்பெண் சட்டக்கல்வி படித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார்.

இந்நிலையில், மாணவிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் பகூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் முர்மு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. படிப்பு உதவுவதாக கூறி முர்மு மாணவியிடம் பழகியுள்ளார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்குமுன் முர்மு வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். அங்கு மாணவியை முர்மு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துள்ளார்.

வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் எனக்கூறி மாணவியை கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com