மூத்த வக்கீல் பராசரன் வீட்டில் ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை: உள்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது

மூத்த வக்கீல் பராசரன் வீட்டில் ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை உருவானதாக உள்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது.
மூத்த வக்கீல் பராசரன் வீட்டில் ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை: உள்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறியிருந்தது. அதன்படி ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த தலம் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறக்கட்டளையின் அலுவலகம் என்று அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பது சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீலும், அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் சார்பில் வாதாடியவருமான கே.பராசரன் வீட்டு முகவரி ஆகும்.

2 முறை அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்த 92 வயதாகும் வக்கீல் பராசரன் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் 1927-ம் ஆண்டு பிறந் தார். அவரது தந்தை கேசவ ஐயங்காரும் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீலாக பணியாற்றியவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com