‘வழக்கறிஞர்கள் ஏ.ஐ. உதவியுடன் மனுக்கள், வாதங்களை தயாரிக்கலாம்’ - சுப்ரீம் கோர்ட்டு

நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்க ஏ.ஐ. உதவியை பயன்பாடுக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
‘வழக்கறிஞர்கள் ஏ.ஐ. உதவியுடன் மனுக்கள், வாதங்களை தயாரிக்கலாம்’ - சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. பிரபல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை, பயனர்களுடன் உரையாடக் கூடிய வகையில் 'ஏ.ஐ. சாட்பாட்' (AI Chatbot) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

இவற்றின் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக பெறுவது மட்டுமின்றி, ஒரு சக மனிதரைப் போல் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு உரையாடுவது, ஆலோசனைகளை வழங்குவது, கருத்து கேட்பது மற்றும் சொல்வது உள்ளிட்ட செயல்பாடுகளையும் இந்த ஏ.ஐ. சாட்பாட் செய்கிறது. மாணவர்களின் வீட்டுப்பாடங்களை எழுதுவது முதல் கம்ப்யூட்டர் புரோகிராம்களை கோடிங் செய்வது வரை பல வேலைகளை ஏ.ஐ. தொழில்நுட்பம் செய்து அசத்துகிறது.

அந்த வகையில், நீதித்துறையிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நீதித்துறையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி அளித்து புதிய வரைவு விதிகளை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏ.ஐ. மூலம் வழக்கறிஞர்கள் மனுக்கள், வாதங்களை தயாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. எனினும் தவறான தகவல்களுக்கு அவர்களே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் நீதிபதிகளும் தீர்ப்புகளின் சுருக்கம், மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியை பயன்படுத்தலாம், ஆனால் தீர்ப்புகளை வழங்க ஏ.ஐ. உதவியை பயன்பாடுக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவு விதிகள் குறித்து ஜூன் 20-ந்தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com