மேற்கு வங்காளத்தில் துறைமுக நிர்வாக குழு தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி

மேற்கு வங்காளத்தில் துறைமுக நிர்வாக குழு தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது.
மேற்கு வங்காளத்தில் துறைமுக நிர்வாக குழு தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் ஹால்டியா நகரில் இருக்கும் ஹால்டியா துறைமுகத்தின் நிர்வாக குழுவில் உள்ள 19 இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். பொதுவாக இந்த தேர்தலில் ஆளும் கட்சியின் கை ஓங்கி இருக்கும். கடந்த முறை நடந்த தேர்தலில் துறைமுக நிர்வாக குழுவின் 19 இடங்களையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹால்டியா துறைமுக நிர்வாக குழுவுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. போட்டியிட்ட 19 இடங்களிலும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

சமீபத்தில் நடந்த சகர்திகி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணியின் இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com