கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி

கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி நடத்தினர்.
கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி
Published on

கொல்கத்தா,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவரது வருகையை கண்டித்து மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தகவல் சேவை மையத்தை நோக்கி இடதுசாரி கட்சிகளை சேர்ந்த மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கண்டன பேரணி நடத்தினர். இதில் டிரம்பின் உருவபொம்மை எரிக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனினும் இந்த பேரணியை வழியில் தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து போக செய்தனர்.

இதைப்போல மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூர் போன்ற நகரங்களிலும் டிரம்ப் வருகைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com