

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-பெங்களூருவில் இன்று (அதாவது நேற்று) ஒரு பெண் மீது, அவருடன் வேலை செய்யும் நபர் திராவகம் வீசி இருக்கிறார். அந்த பெண்ணின் கண்ணில் மட்டும் காயம் ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது பற்றி எனக்கு தகவல் கிடைத்துள்ளது. பெண் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவத்தை அரசும், போலீஸ் துறையும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. அந்த நபரை உடனடியாக கைது செய்யும்படியும் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன்.
அந்த நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கோர்ட்டில் தண்டனை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று பெண்கள் மீது திராவகம் வீசுவது கண்டிக்கத்தக்கது. திராவகத்தை பல்வேறு தேவைகளுக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் திராவகத்தை பெண் மீது வீசி கொடூரமாக தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. அந்த நபர் மீது போலீசார் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார்கள். தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.