காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் சட்ட போராட்டம்கர்நாடக அரசுக்கு பசவராஜ் பொம்மை ஆலோசனை

காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்த கர்நாடக அரசுக்கு பசவராஜ் பொம்மை ஆலோசனை வழங்கினார்.
காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் சட்ட போராட்டம்கர்நாடக அரசுக்கு பசவராஜ் பொம்மை ஆலோசனை
Published on

பெங்களூரு :-

காவிரி நீர் திறப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய அமர்வை அமைத்துள்ளது. இந்த விவகாரத்தை மாநில அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நாம் சரியாக பணியாற்ற வேண்டும். ஆனால் மாநில அரசு இந்த விவகாரத்தில் சரியாக பணியாற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. ஒருபுறம் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மற்றொரு புறம் கோர்ட்டில் வாதிடுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் சட்ட ரீதியாக போராட அரசு தயாராக வேண்டும். எதிர்க்கட்சியாக நாங்கள் அரசுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளிப்போம். மண்டியா விவசாயிகள் நீர் திறக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். தற்போது உள்ள நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

விவசாயிகளின் குரலை இந்த அரசு கேட்க வேண்டும். நீர்ப்பாசனத்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நாங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை கூறியுள்ளோம். விவசாயிகளை கோர்ட்டுக்கு போகும்படி சொல்வது சரியா?. கர்நாடக மக்களின் நலனை காக்கும் பணியை இந்த அரசு செய்ய வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com