‘தேர்தல் ஆணையர்களின் சட்டப் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும்’ - மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல் ஆணையர்கள் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்களா? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தேர்தல் ஆணையர்களின் சட்டப் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும்’ - மல்லிகார்ஜுன கார்கே
Published on: 

புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த தேர்தல் கமிஷனர் நியமன சட்டம், தேர்தல் ஆணையர்கள் மீது சிவில் மற்றும் குற்ற நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதித்து உள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்திருக்கும் நிலையில், இந்த சட்ட பாதுகாப்பை நீக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“தேர்தல் ஆணையர்கள் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்களா? அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும். தேர்தல் ஆணையரக்ள் மீதான இத்தகைய சுதந்திரத்தை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்தி வருகிறார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல்கள் எந்தவித பாகுபாடும் இன்றியும், நேர்மையாகவும் நடத்தப்பட்டால் யாரும் வெற்றி பெறட்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com