

மும்பை,
பழம்பெரும் இசை கலைஞர் அன்னபூர்ணா தேவி இந்துஸ்தானி இசையில் புலமை பெற்றவர். சுர்பாஹர் இசை கலைஞரான இவர் பிரபல சிதார் இசை கலைஞர் ரவி சங்கரின் மனைவியாவார். இவர் இந்துஸ்தானி இசையில் புலமை பெற்ற பிரபல இசை கலைஞர் அலாவுதீன் கானின் மகளாவார்.
கடந்த சில வருடங்களாக வயது முதிர்வினால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.51 மணியளவில் அவர் காலமானார்.