லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றுக்கொண்டார்.
லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்
Published on

புதுடெல்லி,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி காஷ்மீர் இனிமேல் மாநிலம் இல்லை. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்துவிட்டது.

இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இவர்களில் லடாக் யூனியன் பிரதச துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று பதவியேற்றுக்கொண்டார். காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com