டெல்லியில் மேலும் குறைந்த கொரோனா

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
டெல்லியில் மேலும் குறைந்த கொரோனா
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 04 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 385 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 505 ஆக உள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com